டூரிஸ்ட் விசாவில் டெல்லி வந்து விபச்சாரம்-6 உஸ்பெகிஸ்தான் பெண்கள் கைது
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் தங்கியிருந்து விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த 6 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லியில் கிரேட்டர் கைலாஷ்-2 பகுதியில் ஒரு பிளாட்டில் தங்கியிருந்து இவர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.
23 முதல் 28 வயதுக்கு உட்பட்ட இவர்கள் ஒருநாளைக்கு ரூ. 20,000 முதல் ரூ. 35,000 வரை பணம் வசூலித்துள்ளனர். டூரிஸ்ட் விசாவில் இவர்களை வரவழைத்து இந்தத் தொழிலில் ஈடுபடுத்திய ஏஜென்ட் தப்பிவிட்டார்.
அவரைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த இரு வாரங்களில் டெல்லி போலீசார் கைது செய்துள்ள 3வது வெளிநாட்டுப் பெண்கள் விபச்சாரக் குழு இதுவாகும். கடந்த வாரம் கஜாகிஸ்தான், நேபாளத்தைச் சேர்ந்த பெண்களும் ஏஜென்டுகளும் கைதானது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications