திடீர் இடமாற்றத்தால் பதட்டத்தில் பணியாற்றும் அரசு அதிகாரிகள்
சென்னை: அரசின் முக்கிய அதிபாரிகள் அவ்வப்போது இடமாற்றம் செய்யப்படுவதால், தங்கள் பணிகளில் பதட்டத்துடன் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த திமுக ஆட்சியில் திருநெல்வேலி மாவட்டத்தின் கலெக்டராக இருந்தவர் ஜெயராமன். அதிமுக ஆட்சிக்கு வந்த உடன், அவருக்கு பதிலாக நடராஜன் கலெக்டராக நியமிக்கப்பட்டார். 48 நாட்கள் மட்டுமே பணியாற்றிய நடராஜன் மாற்றப்பட்டு, செல்வராஜ் புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல நெல்லை சரக போலீஸ் டிஐஜியாக இருந்த சண்முகராஜேஸ்வரன், சென்னைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக, ராமசுப்பிரமணியம் என்பவர் டிஐஜியாக நியமிக்கப்பட்டார். கடந்த 18ம் தேதி வெளிநாட்டு பயிற்சியை முடித்துக் கொண்டு வந்த ராமசுப்பிரமணி காலையில் பொறுப்பேற்றார். மணிநேரங்கள் மட்டுமே பணியாற்றிய அவர், அன்று மாலையே திருச்சி ஆயுதப்படை முகாமுக்கு மாற்றப்பட்டார். தற்போது வரை அந்த பணி காலியாகவே உள்ளது.
இதேபோல ஆங்காங்கே, அதிகாரிகள் திடீரென்று இடமாற்றம் செய்யப்படுவதால், பொறுப்பேற்கும் அதிகாரிகள் மன பதட்டத்திலேயே பணியாற்ற வேண்டியுள்ளது. இதனால், மக்களுக்கான வளர்ச்சிப் பணி்கள் முடங்கி விடுகிறது.












Click it and Unblock the Notifications