கேரள சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு- சப் இன்ஸ்பெக்டர் கைது
திருவனந்தபுரம்: கேரளாவில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் திருச்சூரைச் சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் பரவூரை சேர்ந்த 14 வயது சிறுமியை அவரது தந்தையே கடந்த 2 வருடங்களாக பல இடங்களுக்கு அழைத்து சென்று விபசாரத்தில் ஈடுபடுத்திய சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த வழக்கில் இதுவரை 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சிறுமியை காண்டிராக்டர், அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பலத்காரம் செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்கள் அனைவரையும் கைது செய்யும் முயற்சியில் குற்றப்பிரிவு போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இந்த வழக்கு விசாரணை பரவூர் நீதிமன்றத்தில் நடநதது.
வழக்கை விசாரித்த நீதிபதி கமால்பாஷா இந்த வழக்கில் போலீஸ் அதிகாரி ஒருவர் சிறுமியை பலத்காரம் செய்ததற்கு ஆதாரம் இருந்தபோதிலும் அவரை வழக்கில் சேர்த்து கைது செய்யாதது கண்டிக்கத்தக்கது என்று கூறியிருந்தார். இதனையடுத்து அந்த போலீஸ் அதிகாரி யார் என்ற பரபரப்பு எழுந்தது.
இந்நிலையில் நேற்று திருச்சூர் ஆயுதப்படையில் பணிபுரியும் பத்மகுமார் என்ற சப்-இன்ஸ்பெக்டரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். விசாரணையில் இவரும், இவரது நண்பர்கள் 2 பேரும் கொச்சியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் சிறுமியை பலத்காரம் செய்தது தெரிய வந்துள்ளது.
சப்-இன்ஸ்பெக்டரின் நண்பர்கள் 2 பேரும் வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டனர். கைது செய்யப்பட்ட பத்மகுமாரை குற்றப்பிரிவு போலீசார் நேற்று எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து எஸ்ஐ பத்மகுமார் ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications