ஈழத் தமிழர்களுக்காக துப்பாக்கி தூக்க வேண்டாம், கையெழுத்திடுங்கள்: திருமாவளவன் கோரிக்கை
புதுச்சேரி: ஈழத் தமிழர்களுக்காக இங்குள்ள தமிழர்கள் துப்பாக்கியைத் தூக்க வேண்டாம், வெறும் கையெழுத்துப் போட்டு தங்கள் உணர்வை வெளிப்படுத்தட்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புதுவையில் கையெழுத்து இயக்கம் நடந்தது.
இதை துவக்கி வைத்து திருமாவளவன் பேசியதாவது,
கடந்த 2009-ம் ஆண்டு இலங்கையில் அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவால் 1 லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் ஈவு இரக்கமின்றி கொன்று குவிக்கப்பட்டனர். இது சர்வதேச போர்க்குற்றம் என்று ஐ.நா மற்றும் அமெரிக்க குழு அறிவித்தது.
இதையடுத்து இலங்கைக்கு அளித்து வந்த நிதி உதவியை அமெரி்க்கா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது வரவேற்கத்தக்கது.
இலங்கையில் தமிழ் ஈழ அரசு அமைய ருத்திரகுமார் தலைமையில் 1 கோடி பேரிடம் கையெழுத்து வாங்கும் இயக்கம் துவக்கப்பட்டுள்ளது. தமிழ் ஈழ அமைப்பைச் சேர்ந்த தயாபரன் என்னை தொடர்பு கொண்டு இந்த இயக்கத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
தனி ஈழ நாடு அமைய, ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த 10 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கும் பணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஈடுபட்டுள்ளது.
கடந்த 12-ம் தேதி துவங்கப்பட்ட இந்த கையெழுத்து இயகக்கம் வரும் 3-ம் தேதி முடிவடைகிறது. ஈழத் தமிழர்களுக்காக இங்குள்ள தமிழர்கள் துப்பாக்கியைத் தூக்க வேண்டாம், கையெழுத்து போட்டு தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினால் போதும் என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications