மதுரை பாமக நிர்வாகி கொலை: புதிய தமிழகம் கட்சியினர் 2 பேர் சரண்
திருச்செந்தூர்: மதுரை பாமக மாநில துணை பொதுச் செயலாளர் இளஞ்செழியன் கொலை வழக்கில் புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த 2 பேர் நேற்று திருச்செந்தூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
மதுரை அவனியாபுரம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் இளஞ்செழியன். பாமக மாநில துணை பொதுச் செயலாளரான இவர் மதுரை பைபாஸ் ரோடு வேல்முருகன் நகரில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் ஸ்கூட்டரில் சென்றபோது இவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக புதிய தமிழகம் கட்சியின் புற நகர் மாவட்ட செயலாளர் காசிவிஸ்வநாதன் எஸ்எஸ் காலனி போலீசில் சரணடைந்தார். கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில் இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மதுரை அவனியாபுரம் புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த காசிராஜன், பாலா ஆகியோர் திருச்செந்தூர் மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்தனர். மாஜிஸ்திரேட் பிரீதா இருவரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இருவரும் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications