அதிகாரிகள் ஆசி்யோடு ஏகபோகமாக கடத்தப்படும் ரேஷன் அரிசி- தமிழக-கேரள எல்லையில் அதிகரிப்பு

Subscribe to Oneindia Tamil

புளியரை: தமிழக-கேரள எல்லையில் சோதனை சாவடிகளில் உள்ள அதிகாரிகள் ஆசியோடு ரேசன் அரிசி கடத்தல் அமோகமாய் நடந்து வருகிறது.

தமிழக-கேரள எல்லைகளில் திருநெல்வேலி மாவட்டம் புளியரை முக்கியமானது. இங்கு வணிகவரித்துறை, காவல்துறை, போக்குவரத்து துறை, வனத்துறை, வருவாய்துறை ஆகியவற்றின் 5 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அண்டை மாநிலமான கேரளாவுக்கு கொண்டு செல்லப்படும் பொருட்கள் அனைத்தும், இந்த சோதனை சாவடிகளை கடத்துதான் செல்ல வேண்டும். தற்போது ஆட்சிக்கு வந்துள்ள அதிமுக, தமிழக மக்களின் நன்மைகளை கருத்தில் கொண்டு, இலவச அரிசி வழங்கும் திட்டத்தை தொடங்கியது.

இந்த அறிவிப்பு மக்களுக்கு மகிழ்ச்சி அளித்தது என்பதை விட, ஏற்கனவே அரிசிக் கடத்தலில் ஈடுபட்டு வந்தவர்களுக்கு இது ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியாக அமைந்துள்ளது. இலவச அரிசி வழங்கும் திட்டம் துவக்கப்பட்டதில் இருந்தே, தமிழக-கேரள மாநிலங்களை இணைக்கும், 25 கேரளா மாநில பஸ்களில், 1 டன் ரேசன் அரிசி வரை கடத்தப்படுகிறது.

இப்படி தமிழக மக்களின் நலனுக்காக அவர்களின் வரிப்பணத்தில் வழங்கப்படும் ரேசன் அரிசி, கேரளாவிற்கு கடத்தப்படுகிறது. கடத்தலை தடுக்க சோதனை சாவடிகளில் உள்ள அரசு பணியாளர்களின் கண்களை, கடத்தல்காரர்கள் அளிக்கும், 50 முதல் 200 ரூபாய் பணம் மறைத்து விடுகிறது.

பணத்திற்கு முன் அமைதியாகிவிடும் அதிகாரிகளின் கண்களுக்கு முன்பாக, மினி லாரிகள், லாரிகள் மூலம் தமிழக அரிசி கேரளாவிற்கு சர்வசாதாரணமாக அள்ளிச் செல்லப்படுகிறது. இதற்கு விதிவிலக்காக இருந்த காவல்துறை சோதனை சாவடியிலும், இப்போது தனிப்படை ஆட்களை கவனித்து வி்ட்டு பாக்கெட்டுகளை நிரப்பிக் கொள்கின்றனர்.

எல்லையில் தொடரும் இந்த எல்லாயில்லாத ரேசன் அரிசி கடத்தலை தமிழக அரசு கவனிப்பது எப்போதோ?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+