மோசடி விசா: இந்திய மாணவர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

விதிமுறைகளை மீறி அதிக அளவில் மாணவர்களை சேர்ந்த மோசடியில் அமெரிக்காவிலுள்ள நார்தர்ன் வெர்ஜீனியா பல்கலைகழகம் சிக்கியுள்ளது. இங்கு விதிமுறைகளை மீறி மாணவர்கள் சேர்க்கப்படிருந்ததை அந்நாட்டு புலனாய்வுத் துறை கண்டுபிடித்துள்ளது.
மேலும், அந்த பல்கலைகழகத்தில் அதிரடி சோதனைகளும் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம், அங்கு பயிலும் இந்திய மாணவர்கள் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், அந்த பல்கலைகழகத்தில் பயிலும் இந்திய மாணவர்கள் வேறு பல்கலைகழகத்தில் சேர்ந்துகொள்ள அனுமதி அளிப்பதாக அமெரிக்க அரசு உறுதி கூறியுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்கா வந்து படிக்க திட்டமிட்டுள்ள இந்திய மாணவர்கள் விசா தரகர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு அந்நாட்டு எச்சரித்துள்ளது. இதுபோன்ற, மோசடி வளையத்திற்குள் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அரசின் செய்திதொடர்பாளர் மார்க் டோனர் கூறியதாவது:
"மோசடி விசா சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம். இதுதொடர்பாக, இந்திய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு வருகிறோம். டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்திடம் இதுகுறித்து விரிவாக விளக்கியுள்ளது.
விசாரணை நடந்து வரும் நிலையில் இதுகுறித்து மேற்கொண்டு எதுவும் கூற இயலாது. மோசடி விசா மற்றும் போலி ஆவணங்களை விற்கும் தரகர்களிடம் இந்திய மாணவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். அமெரிக்கா வர திட்டமிட்டுள்ள இந்திய மாணவர்கள் மோசடி விசா வளையத்திற்குள் சிக்கிக்கொள்ள வேண்டாம்," என்று கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications