கட்சி முடிவை மதித்து பதவி விலகி விட்டேன், இனி நான் சுதந்திர மனிதன்-எதியூரப்பா
பெங்களூர்: கட்சித் தலைவர்களை மதித்து அவர்களது உத்தரவுப்படி நான் பதவியிலிருந்து விலகி விட்டேன். மக்களுக்காக, மக்கள் நலனுக்காக நான் உழைத்தேன். இனி நான் சுதந்திர மனிதன் என்று கூறியுள்ளார் முதல்வர் பதவியிலிருந்து விலகியுள்ள எதியூரப்பா.
பெரும் பரபரப்புக்கு மத்தியில் இன்று மாலை தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் ஊர்வலமாக ஆளுநர் மாளிகைக்குச் சென்று தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பரத்வாஜை சந்தித்துக் கொடுத்தார் எதியூரப்பா.
பின்னர் வெளியில் வந்த எதியூரப்பா எழுதி வைத்திருந்த செய்திக்குறிப்பை வாசித்தார். அதில் தனது ஆட்சி செய்த சாதனைகள், மக்கள் நலத் திட்டங்கள் உள்ளிட்டவற்றை வாசித்தார்.
அவர் கூறுகையில், கட்சித் தலைவர்களின் உத்தரவை ஏற்று, அவர்களை மதித்து நான் பதவியிலிருந்து விலகியுள்ளேன். மக்களுக்காக நான் உழைத்தேன். அந்த வாய்ப்பை அளித்த கட்சித் தலைமைக்கும், மக்களுக்கும், அமைச்சர்களுக்கும், எம்.எல்.ஏக்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் எதியூரப்பா.
முன்னதாக அவர் கூறுகையில், விதான செளதாவிலிருந்து செயல்பட விடாமல் எனது கைகளையும், கால்களையும் கட்டிப் போட்டு விட்டனர். இருப்பினும் இப்போது நான் பதவியிலிருந்து விலகி விட்டேன். இனிமேல் நான் சுதந்திர மனிதன். மக்களை நான் இனி சந்திக்க எந்தவித சிக்கலும் இல்லை, தடையும் இல்லை. என்னை இனி யாரும் தடுக்க முடியாது.
பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்காக இனி உழைக்கப் போகிறேன். பெண்கள் நலனுக்காக உழைக்கப் போகிறேன். மக்களுக்காக பாடுபடப் போகிறேன். இதை யாரும் தடுக்க முடியாது என்றார் அவர்.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications