சீனாவில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதலில் 20 பேர் பலி!
பெய்ஜிங்: சீனாவின் ஷின்ஜியாங் மாகாணத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 பேர் பலியாயினர்.
பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் உள்ளது இந்த மாகாணம். இந்தப் பகுதியில் கடந்த பல காலமாகவே தீவிரவாதிகள் ஊடுருவல் இருந்து வருகிறது. சீன அரசுக்கு எதிரான போராட்டங்களும் நடந்து வருகின்றன. ஆனால், அதை வெளியில் சொல்லாமல் மறைத்து வருகிறது சீனா.
இந் நிலையில் பாகிஸ்தானின் கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம் என்ற தீவிரவாத அமைப்பு ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயிற்சி முகாம்கள் அமைத்துள்ளது.
அங்கு பயிற்சி பெறும் தீவிரவாதிகள் ஷின்ஜியாங் மாகாணத்தில் ஊடுருவி அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதுவரை சிறிய அளவிலேயே தாக்குதல் நடத்தி வந்த இந்த அமைப்பு கடந்த இரு நாட்களாக ஷின்ஜியாங் மாகாணத்தில் உள்ள காஷ்கார் என்ற இடத்தில் புகுந்து பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
குண்டுகளையும் வெடிக்கச் செய்தனர். ஒரு ஹோட்டல் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அதற்கு தீ வைத்தனர். இதில் 20 பேர் பலியாகியுள்ளனர். தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளை சீன போலீசார் சுட்டு்க் கொன்றுவிட்டனர்.
இத் தாக்குதலை நடத்தியது பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் என்று சீனா குற்றம் சாட்டியுள்ளது. பாகிஸ்தானுக்கு மிக நெருக்கமான சீனாவே அந்த நாடு மீது புகார் கூறி்யுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியில் ஒரு பகுதியை சீனாவுக்கு அந்த நாடு தாரை வார்த்ததும், இப்போது அந்தப் பகுதி வழியாகத்தான் பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதிகள் சீனாவுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பகுதி வழியாகத் தான் சீனா-பாகிஸ்தான் இடையே பெரும்பாலான சரக்குப் போக்குவரத்தும், வர்த்தகமும் நடந்து வருகிறது.
ஷின்ஜியாங் மாகாணத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் இஸ்லாமியர்கள், மத சுதந்திரம் கோரி கடந்த ஆண்டுகளாகவே போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால், அதை சீனா ராணுவத்தைக் கொண்டு அடக்கி வருகிறது.
2009ம் ஆண்டு இங்கு நடந்த பெரும் கலவரத்தில் 200 பேரை ராணுவம் கொன்று குவித்தது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications