இங்கிலாந்தில் 12 மணிநேரம் தொடர்ந்து வீடியோ கேம் ஆடிய வாலிபர் பலி

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த டேவிட் மகன் கிரிஷ் ஸ்டேனிபோர்த் (20). வீடியோ கேம்கள் விளையாட்டில் அதிக ஈடுபாடு கொண்டவர். இந்நிலையில், எக்ஸ் பாக்ஸ் என்ற வீடியோ கேமில் ஆன்-லைன் மூலம் பலருடன் விளையாடி வந்தார்.
அப்படி தொடர்ந்து 12 மணிநேரம் விளையாடிய அவர், திடீரென மயக்கமடைந்து விழுந்தார். நல்ல உடல்நிலையில் இருந்த அவர் திடீரென மயக்கமடைந்து விழுந்ததால் உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்தார். சிகிச்சையளித்த டாக்டர்கள் கூறுகையில், தொடர்ந்து 12 மணிநேரம் ஒரே இடத்தில் அமர்ந்து இடைவிடாமல் விளையாடியதால், மூளை செயல்பாடு அதிகரித்து நரம்புகளில் ரத்தம் உறைவு ஏற்பட்டு இறந்ததாக தெரிவித்தனர்.
ஸ்டேனிபோர்த் தந்தை டேவிட் கூறுகையில், இதில் எக்ஸ்பாக்ஸ் வீடியோ கேமை தயாரித்த நிறுவனத்தின் மீது எந்த குற்றமும் இல்லை. அதை விளையாடியவர் தரப்பையே குற்றம் சாரும். ஏனெனில், விளையாட்டை சாதாரணமாக எடுத்துக் கொண்டு விளையாடாமல், அதிலேயே மூழ்கி, தொடர்ந்து விளையாடியதால், ஸ்டேனிபோர்த் இறந்தான். இதன்மூலம் அப்படி விளையாடுபவர்களுக்கு ஒரு முன்னுதாரமாக மாறிவிட்டான், என்றார்.
வீடியோ கேம் தயாரித்த நிறுவனத்தினர் கூறுகையில், நன்கு திறமையானவர்களை கொண்டே கேம்களை தயாரிக்கிறோம். விளையாடுபவர்கள் தகுந்த உடற்பயிற்சியும், இடைவெளியும் எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம், என்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications