மக்களை நேரில் சந்தித்து தேர்தலில் போட்டியி ஹஸாரே தயாரா?-காங். கேள்வி
டெல்லி: தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. ஆகி நாடாளுமன்றம் வந்து கேள்வி கேட்கட்டும் அன்னா ஹஸாரே என்று கூறியுள்ளார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் மணீஷ் திவாரி.
லோக்பால் மசோதா தொடர்பாக அன்னா ஹஸாரே குழுவினர் கொடுத்த பரிந்துரைகளை மத்திய அரசு நிராகரித்து விட்டது. இதனால் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது அன்னா ஹஸாரே குழு. இந்த நிலையில், அன்னாவின் கோரிக்கைகளுக்கு ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பு தெரிவித்து வரும் மத்திய அமைச்சர் கபில் சிபலின் தொகுதியில், கருத்துக் கணிப்பு நடத்தி அதன் முடிவை வெளியிட்டுள்ளது அன்னா ஹஸாரே குழு.
இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி கருத்து தெரிவிக்கையில், மக்களை நேரில் சந்தித்து, தேர்தலில் போட்டியிட்டு அன்னா ஹஸாரே எம்.பியாகட்டும். பின்னர் நாடாளுமன்றத்திற்கு வந்து அவர் கேள்விகள் கேட்கட்டும், நாங்கள் பதில் சொல்கிறோம் என்றார்.
இதற்கிடையே, காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான திக்விஜய் சிங் கூறுகையில், லோக்பால் மசோதா வரம்புக்குள் பிரதமரைக் கொண்டு வர வேண்டும் என்று அன்னா கூறி வருவது மத்தியஅரசுக்கு விடப்படும் பகிரங்க சவாலாகும்.
லோக்பால் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப் போவது மக்கள் அதிகாரம் பெற்ற நாடாளுமன்றமா இல்லை அன்னாவா?. அரசியல் சட்டப்படியான அதிகாரம் அன்னாவுக்கு உள்ளதா, நாடாளு்மன்றத்துக்கு உள்ளதா? எனவே நாடாளுமன்றம்தான் லோக்பால் குறித்து முடிவு செய்ய வேண்டும் என்றார் அவர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications