10 நாளில் முதல் மனைவி ஓட்டம், 30 நாளில் 2வது மனைவியும் ஓட்டம்: ஒரு கணவரின் பரிதாபம்!
திருவட்டார்: தனது முதல் மனைவியும், 2வது மனைவியும் அடுத்தடுத்து வீட்டை விட்டு வெளியேறியதால் கணவர் பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தார். இதுகுறித்துப் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூரைச் சேர்ந்தவர் ஷியாம் ராஜ். இவருக்கு வயது 33 ஆகிறது. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்தார். ஆனால் அந்தப் பெண், ஏற்கனவே தனது உறவினர் ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது.
இதனால் ஷியாமுடன் குடும்பம் நடத்த மனம் இல்லாமல், கல்யாணமாகி 10 நாளிலேயே வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.
இதனால் மனம் உடைந்த ஷியாம் ராஜ், மனதை தேற்றிக் கொண்டு தனது ஊரைச் சேர்ந்த ஜெனீபா என்ற பெண்ணை 2வது திருமணம் செய்தார். ஆனால் ஷியாம் ராஜின் நேரமோ என்னவோ இந்தப் பெண்ணும் தனது உறவினர் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார்.
அந்த வாலிபர் வெளிநாடு போயிருந்த சமயம் பார்த்து ஜெனீபாவின் குடும்பத்தினர், ஷியாமுக்கு மணம் முடித்து வைத்து விட்டனர்.
இந்த நிலையில், வெளிநாட்டிலிருந்து திரும்பினார் ஜெனீபாவின் காதலர். அதன் பின்னர் ஜெனீபா வீட்டை விட்டு வெளியேறி அந்த வாலிபருடன் போய் விட்டார். திருமணம் நடந்த ஒரே மாதத்தில் ஜெனீபா வீட்டை விட்டு ஓடி விட்டார்.
இப்படி அடுத்தடுத்து தனது 2 மனைவிகளும் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்ததால் பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளார் ஷியாம் ராஜ்.
தற்போது போலீஸில் புகார் கொடுத்துள்ளார் ஷியாம் ராஜ். அதில், ஜெனீபா வீட்டை விட்டு ஓடியது மட்டுமல்லாமல் எனது தங்கையின் வளையல்களையும், எனது பாஸ்போர்ட்டையும் எடுத்துக் கொண்டு போயுள்ளார். அவற்றை மீட்டுத் தர வேண்டும். அதேபோல ஜெனீபாவையும் மீட்டுத் தர வேண்டும். அவரை மீண்டும் மனைவியாக ஏற்றுக் கொள்ள நான் தயாராகவே இருக்கிறேன் என்று கூறியுள்ளார் ஷியாம் ராஜ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications