கருணாநிதியின் பேச்சு பொறுப்பற்ற முறையில் உள்ளது - செ.கு. தமிழரசன் தாக்கு
வேலூர்: திமுகவினர் மீது பொய் வழக்கு போட்டு மாநில அரசு திமுகவினரை கைது செய்வதாக கருணாநிதி கூறுகிறார். ஐந்து முறை முதல்வராக இருந்த கருணாநிதியின் பேச்சு பொறுப்பற்ற முறையில் உள்ளது என்று இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் செ. கு. தமிழரசன் கூறியுள்ளார்.
இந்திய குடியரசு கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் வேலூரில் உள்ள ஒரு தனியார் ஓட்டல் ஒன்றில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக் கட்சியின் மாநில தலைவரும், சட்ட மன்ற உறுப்பினருமான செ.கு. தமிழரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது
தமிழகத்தில் சமச்சீர் கல்வி திட்டத்திற்கு தமிழக அரசு எதிராக இருப்பது போன்ற பொய்ப் பிரச்சாரத்தை மக்களிடையே பரப்பப்பட்டு வருகிறது.
கடந்த திமுக அரசால் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் சரியில்லை. இதனால், அனைத்து தரப்பினரும் ஏற்று கொள்ளக் கூடிய வகையில் அத்திட்டத்தை ஒரு ஆண்டு கழித்து செயல்படுத்துவதாக அரசு கூறியுள்ளது.இதனை குடியரசு கட்சி வரவேற்கிறது.
சமச்சீர் கல்வி சம்பந்தமாக கடந்த திமுக அரசால் அமைக்கப்பட்ட முத்துக்குமாரசாமி கமிட்டி நூற்றுக்கும் மேற்பட்ட பரிந்துரைகளை வழங்கியிருக்கிறது. ஆனால் கடந்த திமுக அரசு இதில் 10 பரிந்துரைகளை கூட ஏற்கவில்லை. அப்படியிருக்கையில், அந்த சமச்சீர் பாடபுத்தகங்கள் எப்படி தரமானதாக இருக்க முடியும் ?
திமுக மீது பொய் வழக்கு போட்டு மாநில அரசு திமுகவினரை கைது செய்வதாக கருணாநிதி கூறுகிறார். ஐந்து முறை முதல்வராக இருந்த கருணாநிதியின் பேச்சு பொறுப்பற்ற முறையில் உள்ளது.
போலீசார் யார் மீதும் தானாக வழக்கு போடவில்லை. போடவும் முடியாது. ஆதாரத்துடன் வரும் புகாரின் அடிப்படையில் தான் வழக்கு பதிவு செய்கின்றனர் என்றார் அவர்.
-
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications