நாசரேத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. பஞ்சாயத்துத் தலைவர் கைது
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: வீட்டில், பணம் வைத்து சூதாடிய நாசரேத் தி.மு.க., பேரூராட்சி தலைவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்தில் உள்ள ஒரு வீட்டில் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நாசரேத் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அங்கு திடீர் சோதனை நடத்திய போது, பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த நாசரேத் தி.மு.க., பேரூராட்சி தலைவர் மாமல்லன் (43) சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும், அவருடன் சூதாட்டத்தில் ஈடுபட்ட ராஜன் (55), டெனி (38), ஸ்டீபன் (37), கோயில்ராஜ் (50), சாமுவேல் (29), கமல்காந்த் (29), பிரேம்குமார் (35) ஆகியோரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 35,130 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications