For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும்-ஜெயலலிதா

Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று புதுப்பிக்கப்பட்ட பத்திரிக்கையாளர் அறை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு அறையைத் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்கள் அவரிடம், நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வுப் பிரச்சினை தொடர்பாக நடைபெறும் விவாதம் குறித்துக் கேட்டனர். அதற்குப் பதிலளித்த ஜெயலலிதா, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு மத்திய அரசிடம்தான் உள்ளது.

மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.

தமிழகத்தில் பொது மக்களுக்கு பயனளிக்கும் வகையில், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை நான் எடுத்து வருகிறேன் என்றார்.

English summary
Union govt has to take responsibility for the price rise issue, said TN Chief Minister Jayalalitha. She said that, Centrl govt should take actions to curb the price rise and control the inflation. In Tamil Nadu, I am taking actions to control the price rise, she also said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X