போலி பைலட் லைசென்ஸ் வழங்கிய விவகாரத்தி்ல 15 வழக்குகள் பதிவு: வயலார் ரவி
டெல்லி: போலி பைலட் லைசன்ஸ் வழங்கப்பட்ட விவகாரத்தில், 15 வழக்குகள் பதிவாகி உள்ளதாக, மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் வயலார் ரவி தெரிவித்தார்.
லோக்சபாவில் எழுப்பப்பட்ட கேளவிகளுக்கிடையே மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் வயலார் ரவி அளித்துள்ள பதில் வருமாறு:
துறையின் தொடர் பரிசோதனையில், பைலட் லைசென்ஸ் பெறுவதற்காக பல முறைகேடுகளில் ஈடுபட்டதாக, 15 வழக்குகள் பதிவாகி உள்ளது. இந்த லைசென்ஸ்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில், வர்த்தக விமானங்களின் பைலட் லைசென்ஸ் தொடர்பாக 9 வழக்குகளும், விமான போக்குவரத்து பைலட் லைசென்ஸ் தொடர்பாக 6 வழக்குகளும் பதிவாகி உள்ளது.
இந்த வழக்குகளில் 3 டி.ஜி.சி.ஏ, அதிகாரிகளும், 11 பைலட்கள், 5 புரேக்கர்கள் என 19 பேரை கைது செய்து டெல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடந்த ஜனவரி மாதம் முகப்பு இடித்து விபத்தை சந்தித்த ஏர்பஸ் 320 விமானம் குறித்து விசாரித்த போது, பைலட் தேர்வில் சில மோசடிகள் நடந்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக 1704 பைலட் பயிற்சி பெறும் மாணவர்களின் சான்றிதழ்களை பரிசோதித்த போது, இதில், 15 லைசென்ஸ்கள் போலியானவை எனத் தெரிந்தது. உடனடியாக 15 பேருடைய லைசென்ஸ்களும் முடக்கி வைத்து, கைது செய்யப்பட்டனர். பல முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், பைலட் லைசென்ஸ் பெறும் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வயலார் ரவி தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications