ஸ்டிரைக்: நாடு முழுவதும் வங்கிப் பணிகள் கடுமையாக பாதிப்பு
Subscribe to Oneindia Tamil

பொதுத்துறை வங்கிகள், பழைய தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், மண்டல ஊரக வங்கிகளைச் சேர்ந்த சுமார் 10 லட்சம் ஊழியர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தனியார் வங்கிகள் செயல்பட்டாலும், காசோலைகள் க்ளியர் ஆவது உள்ளிட்ட அடிப்படைப் பணிகள் நடக்கவில்லை.
இதனால் நாடு முழுவதும் அனைத்து வங்கிப் பணிகளும் பாதிக்கப்பட்டன.
கன்டேல்வால் கமிட்டி பரிந்துரைகள் வங்கி ஊழியர்களுக்கு எதிராக இருப்பதாகவும், அதை அமலாக்கக் கூடாது என்றும் வங்கி ஊழியர் சங்கங்கள் கூறி வருகின்றன. மேலும் பென்சன், அதிகாரிகளின் வேலை நேரம் ஆகிய விவகாரங்களில் நீண்ட கால கோரிக்கைகளை முன் வைத்தும் இன்றைய வேலை நிறுத்தம் நடந்தது.












Click it and Unblock the Notifications