ஆப்கன் அமெரிக்க தூதரகத்தில் பூனைகள் நடமாட்டம் அதிகரிப்பு-செய்தவறியாமல் ஊழியர்கள் குழப்பம்!

பூனைகளைப் பிடித்துக் கொல்வது அல்லது அவற்றை அங்கிருந்து அப்புறப்படுத்துவது ஆகிய இரண்டில் ஏதாவது ஒரு நடவடிக்கையை எடுத்தாக வேண்டும் என்ற கோரிக்கை ஊழியர்களிடையே வலுத்துள்ளதால், இதுகுறித்து முடிவெடுக்க ஒரு கமிட்டியைப் போட்டுள்ளார் அமெரிக்க தூதர் கிராக்கர்.
காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றும் ஊழியர்கள் பெரும்பாலும் வெளியே செல்வது இல்லை. அப்படிச் சென்றால் தீவிரவாதிகளால் தாக்கப்பட நேரிடும் என்பதால் வெளியில் போவதில்லை. இந்த நிலையில் இந்த பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி ஒரு பெரும் பிரச்சினையை தூதரக ஊழியர்கள் சந்திக்க ஆரம்பித்துள்ளனர். அது பூனைத் தொல்லை.
இந்த தூதரக வளாகத்தில் கிட்டத்தட்ட 30 பூனைகள் பிக் பாஸ்களாக மாறி உலவி வருகின்றன. இவற்றுக்கிடையே அவ்வப்போது சண்டை மூளும். அப்போது ஏற்படும் சத்தத்தால் ஊழியர்கள் கிடுகிடுத்துப் போய் விடுகிறார்களாம். தலிபான் தீவிரவாதிகளையும், அல் கொய்தா பயங்கரவாதிகளையும் கூட பார்த்துப் பயப்படாத அமெரிக்கர்களுக்கு இந்தப் பூனைச் சத்தம் பெரும் தொந்தரவாக மாறியுள்ளதாம்.
அதை விட அவ்வப்போது எல்லை மீறும் பூனைகள், தூதரக ஊழியர்களை துரத்துவதும், கடிப்பதும் கூட நடப்பதுண்டாம். இதனால் பெரும் தலைவலியாகவே, இந்தப் பூனைகளை என்ன செய்யலாம் என யோசித்தனர். ஊழியர்களில் சிலர், இவற்றைப் பிடித்துக் கொன்று விடலாம் என்று கூறினர். அதற்கு ஒருத ரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. அது பாவம், அவற்றைப் பிடித்து வேறு எங்காவது கொண்டு போய் விட்டு விடலாம் என்று அவர்கள் ஆலோசனை கூறினர். என்ன செய்தாவது இந்தத்தொலைக்கு முடிவு கட்டுங்கள் என்று ஊழியர்கள் கோரஸாக முறையிடவே இதற்காக ஒரு கமிட்டியைப் போட்டு விட்டார் தூதர் கிராக்கர்.
இந்தக் கமிட்டி தற்போது பூனைகளைக் கொல்லலாமா, நாடு கடத்தலாமா என்பது குறித்து யோசித்து வருகிறதாம். ஊழியர்களின் கருத்துக்களைக் கேட்டு அதன் பின்னர் ஒரு முடிவுக்கு வரவுள்ளனராம்.
இந்தப் பூனைகளை தொல்லையாக நினைக்காத ஊழியர்கள் கூறுகையில், நாடு, வீடு, உறவினர்கள் என அனைத்தையும் விட்டு, இங்கு வேலை செய்யும் எங்களுக்கு இந்த பூனைகள் பெரும் ஆறுதலாக உள்ளது. நகரின் வெளிப் பகுதிகளுக்கு போக எங்களுக்கு அனுமதி இல்லை. நாங்கள் நடப்பதற்கு கூட சுரங்கப் பாதையை தான் பயன்படுத்த வேண்டியுள்ளது. இதனால் மன உளைச்சல் அடையும் போது, அவற்றை பார்த்து, பழகி ஆறுதல் அடைகிறோம். பூனைகளும் எங்களுடன் மிக பாசமாக உள்ளன, என்கின்றனர்.
பூனைகளை கட்டுப்படுத்த கடந்த ஏப்ரல் மாதம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அவற்றை விரும்புவோர் எதிர்ப்பு தெரிவி்த்ததால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், பூனைகளை விரும்புவோருக்கு தற்போது 60 நாட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்குள் பூனைகளுக்கு தகுந்த மற்றொரு இடத்தை அமைத்து பராமரித்து கொள்ள வேண்டும். 60 நாட்களுக்கு பிறகு தூதரகத்தில் சுற்றித் திரியும் பூனைகளை துரத்த நடவடிக்கை எடுக்கப்படும், என பூனை கட்டுபாட்டுக் குழு கூறியுள்ளது.
ஆனால் பூனை விரும்பிகள் பூனைகளை அப்புறப்படுத்துவதற்கு தங்களது அதிருப்தியைத் தெரிவிக்க எங்களைக் காப்பாற்றுங்கள் என்று பூனைப் படத்தைப் போட்ட வாசகத்தை எழுதி அதைத் தட்டி வடிவில் தூதரக வளாகத்தில் வைத்துள்ளனர்.
பேசாமல், அமெரிக்க காங்கிரஸை (நாடாளுமன்றத்தைக்) கூட்டி விவாதம் வைத்து முடிவு செய்யலாமே?!
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications