இந்து மக்கள் கட்சி சார்பில் 14ம் தேதி காவி கொடி பேரணி
நெல்லை: சுதந்திர போராட்டத்தில் உயிர் நீத்த இந்துகளை போற்றும் வகையில் வரும் 14ம் தேதி இந்து மக்கள் கட்சி சார்பில் காவி கொடி பேரணி நெல்லையில் நடத்தப்படும் என அக்கட்சியின் செயலாளர் ஞானசம்பந்தம் தெரிவித்தார்.
இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் ஞானசம்பந்தம் நெல்லையில் நிருபர்களிடம் கூறுகையில், "இந்தியா சுதந்திரம் பெற பல்வேறு தலைவர்கள் பாடுபட்டுள்ளனர். இதை முன்னிட்டு ஒரு அமைப்பு அணிவகுப்பு நடத்தி வருகிறது. இந்த அணிவகுப்பு கலவரத்தை தூண்டும் வகையில் நடத்தப்படுகிறது. எனவே அந்த அமைப்பின் அணிவகுப்பிற்கு அரசு தடைவிதிக்க வேண்டும்.
சுதந்திரம் அடைந்ததும் இந்தியா-பாகிஸ்தான் பிரிக்கப்பட்டபோது லட்சக்கணக்கான இந்துகள் கொல்லப்பட்டனர். சுதந்திரத்தின் போது உயிர் நீத்த இந்துகளின் பெருமையை போற்றும் வகையில் வரும் 14ம் தேதி நெல்லையப்பர் கோவிலில் பாரத மாதா வழிபாடு நடத்த இந்து மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது.
தொடர்ந்து நெல்லையில் காவி கொடி பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும். இதற்கு அனுமதி மறுக்கப்பட்டால் தடையை மீறி பேரணி மற்றும் பொது கூட்டத்தை நடத்துவோம். மத்திய அரசு இந்துகளை பலி வாங்கும் நோக்கில் மதக் கலவர தடுப்பு சட்டத்தை கொண்டவர முயற்சிக்கிறது.
இந்த சட்டத்தால் இந்துகளை கடுமையாக தண்டிக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இந்த சட்டத்தை கொண்டு வரும் முயற்சியை அரசு கைவிட வேண்டும். இதை கண்டிக்கும் வகையில் 9ம் தேதி மதக்கலவர தடு்ப்பு சட்ட நகல் எரிப்பு போராட்டம் சென்னையில் நடக்கும்," என்றார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications