பூமிதான நிலங்கள் குறித்து 3 மாதங்களில் அறிக்கை: அமைச்சர் செந்தூர்பாண்டியன்
நாகர்கோவில்: திருநெல்வேலி, கன்னியாக்குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் பூமி தானத்தில் வினியோகிக்கப்படாமல் உள்ள நிலங்களின் நிலை குறித்த விபரங்களின் முழு ஆய்வறிக்கை 3 மாதத்தில் தமிழக அரசுக்கு வழங்கப்படும் என ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.
நிலம் உள்ளவர்களிடம் நிலத்தை பெற்று அதை நிலம் இல்லாத ஏழைகளுக்கு வழங்கும் பூமிதான இயக்கத்தை தமிழகத்தில் முழுமையாக செயல்படுத்தும் வகையில் அதன் உண்மை நிலையை அறியும் வகையில் அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கான ஆய்வில் கதர்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன் ஈடுபடுள்ளார்.
நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட பூமிதான இயக்கத்தின் உண்மை நிலை அறி்ந்து அரசு்ககு அறிக்கை வழங்குவதற்கான நெல்லை மண்டல ஆய்வு கூட்டம் நாகர்கோவிலில் நேற்று நடந்தது. வனத்துறை அமைச்சர் பச்சைமால், கதர்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன், முன்னிலை வகித்தார். நாஞ்சில் முருகேசன் எம்எல்ஏ, குமரி மாவட்ட கலெக்டர் மதுமதி, மறறும் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட வருவாய் அலுவர்கள் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் செந்தூர்பாண்டியன் கூறுகையில், "அரசு நிலங்களில் சிலர் பாட்டா போட்டிருப்பதும், சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு எவ்வளவு இடம் உள்ளது, அரசு திட்டங்களுக்கோ அல்லது பூமிதானத்திற்கோ கொடுத்த நிலங்களின் உண்மை நிலையை அறிந்து தமிழக முதல்வருக்கு அறிக்கை சமர்பிக்கப்பட இருக்கிறது.
இதற்கான துல்லியமான ஆய்வில் வருவாய்துறை அலுவலர்கள் ஈடுபட வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் 1413 ஏக்கர் நிலமும் நெல்லை மாவட்டத்தில் 1796 ஏக்கரும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 119 ஏக்கர் நிலமும் பூமிதான இயக்குத்துக்கு சொந்தமானது. இவற்றில் தூத்துக்குடி மாவட்டத்தில் 680 ஏக்கரும், நெல்லை மாவட்டத்தில் 1070 ஏக்கரும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 101 ஏக்கரும் நிலங்கள் ஏழைகளுக்கு வினியோகிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள நிலங்கள் வினியோகிக்கப்படாமல் நிலுவையில் உள்ளதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. பூமிதான இயக்கத்தில் நிலங்கள் பெற்றவர்கள் அதனை பயன்படுத்தி வருகிறார்களா, விநியோகிக்கப்படாமல் உள்ள நிலங்களின் நிலை விபரங்களை 3 மாதத்திற்குள் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும்,", என்றார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications