பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை பாதுகாக்க எம்.பிக்களுக்கு கீ.வீரமணி அழைப்பு
மதுரை: பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை பாதுகாக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை ஓரணியில் திரளுமாறு திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி அழைப்பு விடுவித்துள்ளார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கை:
மத்திய மனிதவள அமைச்சகம் மற்றும் கல்வி அமைச்சரகம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மசோதாவில், வடகிழக்கு மாநிலங்களில் ஓ.பி.சி., என்ற இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு நீக்கப்பட்டுள்ளது.
அங்கே ஓ.பி.சி., பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்றால், இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து வடகிழக்கு மாநிலங்கள் பிரிந்து சென்று விட்டதாக, மத்திய கல்வி அமைச்சகம் கருதுகிறதா? இது சரியான தகவலாக இருப்பின் கண்டனத்திற்குரியது.
சமூகநீதி, இடஒதுக்கீடு என்பது இந்தியா முழுவதற்கு சமம். இந்திய அரசியல் சட்டப்படி இட ஒதுக்கீடு அமலில் உள்ள நிலையில் இப்படி ஒரு நிலைப்பாடு எடுப்பது தவறான சட்ட விரோதமான நடவடிக்கை.
வடகிழக்கு மாநிலங்களில் இட ஒதுக்கீடு 50 சதவிகிதத்தைத் தாண்டுவதால், அதைச் சரி செய்ய பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை அறவே நீக்கி விடுகிறார்கள். இது ஓர் ஆபத்தான ஆரம்பம். இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.
எனவே, இந்த விவகாரத்தில், சமூக நீதியில் நம்பிக்கை உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் முன் வரிசையில் நின்று இந்த ஆபத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
மேலும், சமூகநீதிக்கான அனைத்து அமைப்புகளும் உடனே குரல் கொடுக்க முன்வர வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications