சர்வாதிகாரி ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரி எம்ஜிஆர் ரசிகர்கள் போராட்டம்
சென்னை : இலங்கையில் தமிழ் மக்களை கொன்று குவித்த சர்வாதிகாரி ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவித்து தண்டிக்கக் கோரி அனைத்து எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றத்தின் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் ஈழத் தமிழர் பாதுகாப்புப் பேரவை தலைவர் பழ. நெடுமாறன், திரையுலகைச் சேர்ந்த சத்யராஜ், மணிவண்ணன் உள்ளிட்ட பெரும் திரளானோர் கலந்து கொண்டு ராஜபக்சேவை எதிர்த்துக் கோஷமிட்டனர்.
ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவித்து விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டும், இலங்கை மீது ஐ.நா. பொருளாதார தடையை விதிக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது.
பழ. நெடுமாறன் பேசுகையில், எம்ஜிஆருக்கு பிறகு விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு தெரிவிக்க யாரும் முன்வராத காரணத்தினால்தான் ஈழப் போராட்டம் பின்னடைவை சந்தித்தது.
நியாயமாக தமிழ்நாடுதான் விடுதலைப்புலிகளின் விடுதலைப் போராட்டத்துக்கு பின்புலமாக இருக்க வேண்டும். இங்கிருந்துதான் அவர்களுக்கு எல்லா உதவிகளும் செல்ல வேண்டும். அப்படி சென்றிருந்தால் அந்த போராட்டம் நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும் என்பதில் சந்தேகம இல்லை என்று கூறினார்.












Click it and Unblock the Notifications