அமெரிக்காவில் குடும்பச் சண்டையில் 7 பேர் சுட்டுக் கொலை- கொலையாளியை போலீஸார் வீழ்த்தினர்
வாஷிங்டன்: அமெரிக்காவில் குடும்பச் சண்டையில் 7 பேர் அதிரடியாக சுட்டுக் கொல்லப்பட்டனர். கொலையாளி போலீஸாரை தாக்கி விட்டுத் தப்ப முயன்றபோது அவனை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.
ஓஹையோவில் உள்ள கோப்ளி டவுன்ஷிப் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து நகர போலீஸ் தலைவர் மைக்கேல் மியர் கூறுகையில், ஒரே வீட்டில் ஐந்து பேரை சுட்டுக் கொன்ற கொலையாளி, வெளியே வந்து மேலும் 2 பேரை சுட்டுக் கொன்றார்.
தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்து அந்த நபரைப் பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் போலீஸாரையும் தாக்க முயலவே அந்த நபரை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.
கொல்லப்ட்டவர்களில் ஒருவன் 11 வயது சிறுவன் ஆவான். இந்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு இந்த சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக அவர்கள் விரைந்து வந்தனர். அப்போது கொலையாளி 7 பேரை கொன்று குவித்து விட்டு தப்பிச் செல்ல முயன்று கொண்டிருந்தான். அவனைப் பிடிக்க போலீஸார் முயன்றபோது போலீஸாரை நோக்கி அந்த நபர் சுட்டான். இதையடுத்து போலீஸாரும் திருப்பிச் சுட்டனர். இதில் அவன் கொல்லப்பட்டான்.
குடும்பச் சண்டை காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். கொலையாளிக்கும், கொலையானவர்களுக்கும் என்ன உறவு என்பதும் தெரியவில்லை.
சம்பவம் நடந்த கோப்ளி நகர மக்கள் தொகை 14,000 என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications