திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் 6வது அறை திறப்பு குறித்து தேவ பிரசன்னம் தொடங்கியது

திருவனந்தபுரத்தில் உள்ள மிகப் பழமையான பத்மநாபசாமி கோவிலில் உள்ள பாதாள ரகசிய அறைகளைத் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பாக குழு ஒன்றையும் அது நியமித்தது. இந்தக் குழுவினர் மொத்தம் உள்ள 6 அறைகளில் 5 அறைகளைத் திறந்து ஆய்வை முடித்துள்ளனர். இதில் பல லட்சம் கோடி மதிப்புள்ள தங்க, வைர, வைடூரிய, அரிய வகை நகைகள் உள்ளிட்ட பொக்கிஷக் குவியல் கண்டுபிடிக்கப்பட்டு உலகையே வியப்பில் ஆழ்த்தியது.
இந்த நிலையில் 6வது அறையைத் திறக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதன் கதவைத் திறக்க முடியவில்லை. பூட்டு மிகப் பலமாக இருந்ததால் திறப்பு பலன் தரவில்லை. மேலும், அறைக் கதவில் பாம்பு படம் வரையப்பட்டிருப்பதால் அதைத் திறந்தால் கேடு விளையும் என்று கோவில் நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து தேவ பிரசன்னம் கேட்க மன்னர் மார்த்தாண்ட வர்மா உத்தரவிட்டார். தேவ பிரசன்னம் என்பது கடவுளிடம் உத்தரவு கேட்பதாகவும். தேவ பிரசன்னத்தில் உத்தரவு கிடைத்தால் கதவைத் திறக்கலாம் என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இன்று தேவ பிரசன்னம் கேட்கும் நிகழ்ச்சி தொடங்கியது. 3 நாட்கள் இது நடைபெறும். கோவில் தந்திரி பரமேஸ்வரன் தலைமையில் பெங்களூரிலிருந்து வந்துள்ள ஜோதிடர்கள் குழுவும் தேவ பிரசன்னத்தில் ஈடுபட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களும் தாராளமாக பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேவ பிரசன்னத்தில் என்ன உத்தரவு வரப் போகிறது என்பதை அறிய கேரள மக்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகும் ஆவலுடன் காத்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications