திருமங்கலம் சிறுமியை விபச்சாரத்தில் தள்ளி பெண் கைது: முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு
ராமநாதபுரம்: திருமங்கலத்தைச் சேர்ந்த சிறுமியை முதன் முறை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
மதுரை அருகே உள்ள திருமங்கலம் வாகைக்குளத்தை சேர்ந்த 17 வயது பெண் பாண்டிச்செல்வி. அவருக்கு 12 வயதாக இருக்கும்போது திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனால் விரக்தி அடைந்த அப்பெண் வீட்டை விட்டு வெளியேறி திருமங்கலத்தில் ஒரு ஜவுளிக் கடையில் வேலைக்குச் சேர்ந்தார்.
அவருடன் வேலை பார்த்து வந்த பெண்ணின் தாயார் ஒச்சம்மாள், பாண்டிச்செல்வி மனதை மாற்றி ஒரு விபச்சார புரோக்கரிடம் விற்று விட்டார். அதன் பின்னர் பாண்டிச்செல்வியின் வாழ்க்கை சீர்குலைந்தது. பல்வேறு ஊர்களுக்கு அவர் மாற்றி மாற்றி விற்கப்பட்டு விபச்சாரக் குழியில் தள்ளப்பட்டார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ராமேஸ்வரம் திமுக நகராட்சித் தலைவர் ஜலீல் உள்பட 22 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விபச்சார புரோக்கர்களான செல்வி, துரைராஜ், ருக்மணி, பிரியா மற்றும் விபசாரத்தில் ஈடுபட்ட சுப்பிரமணி, ராமகிருஷ்ணன், சரவணக்குமார் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால் உதவி நாடிய சிறுமியை விபச்சாரத்தில் தள்ளிய ஒச்சம்மாள்(40) தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஒச்சம்மாளை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையின்போது அவர் கூறியதாவது,
பாண்டிச்செல்வி திருமங்கலத்தில் உசிலம்பட்டி சாலையில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அதே கடையில் வேலை பார்த்த என் மகள் மூலமாகத் தான் அவர் அறிமுகம் ஆனார். அவரது ஏழ்மை நிலையை நான் பயன்படுத்தி ஆசைவார்த்தை காட்டி அவரை நாகமலை புதுக்கோட்டை கீழக்குயில்குடி பகுதியைச் சேர்ந்த விபச்சார புரோக்கர் சத்யா என்பவரிடம் ரூ.5 ஆயிரத்திற்கு விற்றேன்.
அதன் பிறகு சத்யா பாண்டிச்செல்வியை மதுரை, திருச்சி, காரைக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி விபச்சாரத்தில் ஈடுபடுத்தினார் என்றார்.
ஒச்சம்மாளிடம் நடத்திய விசாரணையில் இந்த விவகாரத்தில் பல முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.
போலீசார் ஒச்சம்மாளை ராமநாதபுரம் 2-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications