நெல்லை அதிமுக நிர்வாகி கொலை:கூலிப்படைக்கு பணம் கொடுத்த வக்கீல் யார்- விசாரணை
நெல்லை: நெல்லை அதிமுக நிர்வாகி கொலையில் கூலிப்படையினருக்கு பணம் கொடுத்த வழக்கறிஞர் யார் என்பது குறித்து கொலையாளிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலப்பாளையம் அருகே உள்ள மேலநந்தம் அக்ரஹார தெருவைச் சேர்ந்தவர் அதிமுக நிர்வாகி சுப்பு.கொக்கிரகுளத்தில் பால் பண்ணை நடத்தி வந்த இவர் கடந்த மார்ச் 9-ம் தேதி உடையார்பட்டி அருகே பைக்கில் சென்றபோது மர்ம கும்பலால் வழிமறித்து கொலை செய்யப்பட்டார்.இது குறித்து தச்சநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி கம்மாளன்குளத்தைச் சேர்ந்த பெருமாள்,சுத்தமல்லி சுந்தர் ஆகியோரை கைது செய்தனர்.
விசாரணையில் இவர்கள் கூலிக்காக கொலை செய்தது தெரிய வந்தது.இதற்காக வழக்கறிஞர் ஒருவர் ரூ. 1.5 லட்சத்தை சத்திரம் புதுக்குளத்தைச் சேர்ந்த ஸ்டேட் மணி என்பவரிடம் கொடுத்துள்ளார்.மணி கூலிப்படைக்கு ரூ.1 லட்சம் கொடுத்து சுப்புவை தீர்த்து கட்டியுள்ளார்.
தச்சநல்லூரி்ல் ஒரு பிரிவினருக்கு சொந்தமான கோவிலும்,திருமண மண்டபமும் உள்ளது.இதை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வர அதே பிரிவைச் சேர்ந்த இரு கோஷ்டியினர் அடிக்கடி மோதி வந்தனர்.இந்நிலையில் ஒரு கோஷ்டிக்கு ஆதரவாக தச்சநல்லூரைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் செயல்பட்டு வந்தார்.இதனால் ஆத்திரமடைந்த எதிர் கோஷ்டியினர் வேல்முருகனை கொல்ல கூலி படையினரை ஏற்பாடு செய்தனர். ஆனால் கூலி படையினர் வேல்முருகனுக்கு பதிலாக பால் வியாபாரி சுப்புவை ஆள்மாறாட்டத்தில் கொலை செய்தனர்.
இவ்வழக்கில் தேடப்பட்ட கூலிப்படையைச் சேர்ந்த ரமேஷ்,ராஜு,முருகேசன்,சங்கரநாராயணன்,கூலிப்படைத் தலைவன் ஸ்டேட் மணி, தச்சநல்லூரைச் சேர்ந்த வெங்கடேசன் ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைநதனர்.இதில் ஸடேட் மணி,சங்கரநாராயணன்,முருகேசன்,வெங்கடேசன் ஆகியோரை தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர்.அதன்படி நேற்று 4 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications