அரசு கேபிள் டிவியில் சேர இன்று கடைசி நாள்: ஆபரேட்டர்கள் முந்தியடிப்பு
சென்னை: அரசு கேபிள் டிவியில் சேர 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆபரேட்டர்கள் தங்கள் பெயர்களை ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். பெயர்களைப் பதிவு செய்ய இன்று தான் கடைசி நாள்.
அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அரசு கேபிள் டிவியை செயல்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. முதல்வர் ஜெயலலிதாவின் கண்காணிப்பில் இந்த பணிகள் நடந்து வருகிறது. அரசு கேபிள் டிவிக்கென்று தனியாக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதி அரசு கேபிள் டிவி செயல்படத் துவங்கும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். இதையடுத்து அதற்கான பணிகள் துரிதமாக நடந்து வருகின்றது. முதல்வர் ஜெயலலிதா கேபிள் டிவி ஆபரேட்டர்களை சந்தித்து பேசினார். பின்னர் அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் சேருமாறு அவர்களுக்கு முதல்வர் அழைப்பு விடுத்தார்.
அவ்வாறு சேர விரும்புபவர்கள் www.arasucable.com என்ற இணையதளத்திற்கு சென்று தங்கள் பெயர்களை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த 5-ம் தேதி வரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆபரேட்டர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர்.
ஏராளமானோர் பதிவு செய்து வருவதால் கால அவகாசம் ஆகஸ்ட் 9-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அந்த அவகாசம் இன்றுடன் முடிவடைவதால் ஆபரேட்டர்கள் போட்டிபோட்டுக் கொண்டு பதிவு செய்து வருகின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications