ஆந்திராவில் 4 ஆண்டுகளில் ரூ. 6 கோடி கள்ளநோட்டு பறிமுதல்

Subscribe to Oneindia Tamil

Fake Currency
ஹைதராபாத்: ஆந்திராவில் கடந்த 4 ஆண்டுகளில்(2007-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை) ரூ. 6 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஆந்திர அரசுக்கு பெரும் தலைவலியாக இருப்பது கள்ளநோட்டு விவகாரம் தான். கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ரூ. 6 கோடி மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து குற்ற புலனாய்வுத் துறை கூடுதல் டிஜிபி எஸ்வி ரமண மூர்த்தி கூறியதாவது,

ஆந்திர போலீஸ் ரிசர்வ் வங்கியின் துணையோடு இது வரை ரூ. 6 கோடியே 15 லட்சத்து 44 ஆயிரத்து 580 மதிப்புள்ள கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்துள்ளது. கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டதற்காக 862 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளநோட்டு விவகாரம் குறித்து மட்டும் இதுவரை ஆயிரத்து 233 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கள்ளநோட்டுகள் அதிலும் குறிப்பாக ரூ. 500 நோட்டுகள் தான் அதிக அளவில் புழக்கத்தில் விடப்படுகிறது. ஹைதராபாத், கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, கடப்பா, விசாகப்பட்டனம் மற்றும் கர்ணூல் மாவட்டங்களில் இருந்து ரூ. 41.85 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஹைதராபாத், நல்கொண்டா, மேற்கு கோதாவரி, கிழக்கு கோதாவரி, விசாகப்பட்டனம் மற்றும் குண்டூர் மாவட்டங்கள் தான் கள்ளநோட்டுப் புழக்கத்தின் முக்கிய மையங்களாக உள்ளன என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+