சச்சின் டெண்டுல்கரின் டெபிட் கார்டுடன் ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்த வாலிபர் கைது

மும்பையில் உள்ள பாரத்மாதா சினிமா தியேட்டருக்கு அருகே உள்ள எச்எஸ்பிசி வங்கியின் ஏடிஎம்முக்கு 21 வயதான வாலிபர் பணம் எடுக்க வந்தார். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸாருக்கு வாலிபரின் கையில் இருந்த கார்டு மீது சந்தேகம் வந்தது. இதையடுத்து அதை வாங்கிப் பார்த்தபோது சச்சின் டெண்டுல்கருக்குச் சொந்தமானது அது என்று தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து அந்த நபரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவரது பெயர் சோயப் தூத்வாலா என்றும், மாஹிம் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது.
இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்து கார்டைக் கைப்பற்றினர். அந்தக் கார்டு உண்மையிலேயே சச்சின் டெண்டுல்கருடையா கார்டுதானா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. மேலும் இது எப்படி இந்த இளைஞரின் கையில் வந்தது என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
ஒருவேளை சச்சின் டெண்டுல்கரின் கார்டு தகவல்களை வைத்து இது போலியாக தயாரிக்கப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
இந்த கார்டு தவிர நான்கு கிரெடிட் கார்டுகள் மற்றும் நான்கு வங்கிகளின் டெபிட் கார்டுகளும் அந்த இளைஞரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. போலீஸ் விசாரணையின்போது தான் ஜூனியர் காலேஜில் 2ம் ஆண்டு படித்து வருவதாக கூறியுள்ளார் அந்த நபர்.
மேலும் தான் வைத்திருந்த சச்சின் டெபிட் கார்டு பஸ் ஸ்டாப் ஒன்றில் கீழே கிடந்ததாகவும், அது செயல்படுகிறதா என்று பார்க்க ஏடிஎம் மையத்துக்கு வந்ததாகவும் தூத்வாலா கூறியுள்ளார். ஆனால் போலீஸார் அவரது பேச்சை நம்ப மறுத்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
சச்சின் டெபிட் கார்டு குறித்து சம்பந்தப்பட்ட வங்கியை போலீஸ் அதிகாரிகள் தொடர்பு கொண்டு தகவல் சேகரித்து வருகின்றனர். அதில் சச்சினுடைய கார்டுதான் என்பது உண்மையானால், சச்சினைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
அதேசமயம், இதுவரை கார்டு காணாமல் போனதாக சச்சின் தரப்பிலிருந்து எந்தப் புகாரும் வரவில்லை என்பதும் போலீஸாரைக் குழப்பியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications