'அட்டாக்' பாண்டி மீது குண்டாஸ்-ரத்து செய்ய மனைவி தயாளு கோரிக்கை!
மதுரை: மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் கூட்டாளிகளில் ஒருவரான அட்டாக் பாண்டி மீது பிரயோகிக்கப்பட்டுள்ள குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி அவரது மனைவி தயாளு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்துள்ளார்.
மதுரையை நடு நடுங்க வைத்த மோசமான ஆட்களில் இந்த அட்டாக் பாண்டியும் ஒருவர். கிட்டத்தட்ட கூலிப்படையினரை போலவே செயல்பட்டு வந்தவர் இவர் என்று மதுரை மக்கள் கூறுகிறார்கள். தினகரன் நாளிதழ் அலுவலகத் தாக்குதலில் முக்கியக் குற்றவாளி இவர். இவர்தான், அலுவலகத்திற்குள் தீவைத்து மூன்று பேர் பரிதாபமாக உயிரிழக்கக் காரணமாக இருந்தவர் என்றும் குற்றம் சாட்டப்பட்டது. இருப்பினும் கடந்த திமுக ஆட்சியின்போது பாண்டி உள்ளிட்ட அத்தனை பேரும் சிந்தாமல், சிதறாமல் வெளியே வந்து விட்டனர்.
இப்போது அதிமுக ஆட்சியில் அட்டாக் பாண்டியை நில அபகரிப்பு வழக்கில் கைது செய்து உள்ளே போட்டுள்ளனர். அவர் மீது குண்டர் சட்டத்தையும் பிரயோகித்து ஒரு வருடத்திற்கு வெளியே வர முடியாமல் செய்துள்ளனர்.
இந்த நிலையில் அட்டாக் பாண்டியி்ன் மனைவி தயாளு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஒரு வழக்குத் தொடர்நதுள்ளார். அதில், என் கணவர் அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டு, பொய்யான வழக்கில் மதுரை போலீசார் குண்டர் சட்டத்தில் அடைத்துள்ளனர்.
பொய்யான வழக்கில் போடப்பட்ட அந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் தயாளு.
இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு கூறி காவல்துறை டிஜிபி ராமானுஜம், மதுரை மாநகர காவல்து ஆணையர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் ஜனார்த்தன ராஜா மற்றும் அருணா ஜெகதீசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications