சேலம் வன்முறை வழக்கு -வீரபாண்டி ஆறுமுகத்தைப் பார்க்க சிறைக்கு வந்த நான்கு பேர் கைது
கோவை : சேலத்தில் வன்முறையில் ஈடுபட்ட தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் 4 ஆதரவாளர்களை கோவை போலீசார் கைது செய்தனர். கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆறுமுகத்தைப் பார்க்க வந்தபோது அவர்களைப் போலீஸார் கைது செய்தனர்.
தி.மு.க.,முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீதான நில அபகரிப்பு புகாரில், சமீபத்தில் சேலம் போலீசார் கைது செய்யப்பட்டார். அப்போது, அவரது ஆதரவாளர்கள் கல்வீச்சு, பஸ்கள், கடைகள் மீது தாக்குதல் போன்ற பல்வேறு வன்முறைகளில் ஈடுபட்டனர். இதில் முக்கிய குற்றவாளியாக தம்மம்பட்டி தி.மு.க. நகர செயலாளர் வி.பி.ஆர்.ராஜனை போலீசார் தேடி வந்தார்.
இந்நிலையில், தம்மம்பட்டி தி.மு.க.,நகர செயலாளர் வி.பி.ஆர்.ராஜன், கோவை சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை சந்திக்க வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை சந்திக்க வந்த வி.பி.ஆர்.ராஜன் உள்ளிட்ட 4 பேரை கோவை போலீசார் கைது செய்தனர்.


Click it and Unblock the Notifications
