மனித உரிமை மீறல் வழக்கில் இன்ஸ்பெக்டருக்கு ரூ.50,000 அபராதம்
நாகர்கோவில்: மனித உரிமை மீறிய வழக்கில், ஊட்டி இன்ஸ்பெக்டர் மணிமொழிக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
கன்னியாகுமரி மாவட்டம், நித்திரவிளை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்தவர் மணிமொழி. இவர் தற்போது ஊட்டியில் இன்ஸ்பெக்டராக உள்ளார். கடந்த 2008ம் ஆண்டு குழித்துறையை சேர்ந்த வக்கீல் அசோக்குமார், ஒரு வழக்கு தொடர்பாக நித்திரவிளை காவல் நிலையத்துக்கு சென்றார்.
அப்போது வக்கீல் அசோக்குமாருக்கும், இன்ஸ்பெக்டர் மணிமொழிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் மணிமொழி, வக்கீல் அசோக்குமாரை லாக்கப்பில் அடைத்து வைத்து தாக்கியுள்ளார்.
தன்னை விதிமுறைகளுக்கு புறம்பாக இன்ஸ்பெக்டர் மணிமொழி லாக்கப்பில் தள்ளி, அவர் மனித உரிமையை மீறி செயல்பட்டதாக வக்கீல் அசோக்குமார் நாகர்கோவில் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
இந்த வழக்கு நீதிபதி சரவணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், இன்ஸ்பெக்டர் மணிமொழிக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இன்ஸ்பெக்டர் மணிமொழி பணிபுரிந்த பல்வேறு போலீஸ் நிலையங்களிலும், சமூக சேவர்கள், அரசியல்வாதிகள், வழக்கறிஞர் என பலதரப்பினருடன் பிரச்சனைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
பல ஊர்களுக்கு இடமாற்றம் கொடுத்து அனுப்பிய காவல் துறை தலைமை, மணிமொழி மீது ஆரம்பத்திலேயே துறை ரீதியான நடவடிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் காவல்துறைக்கு இந்த அவமானம் ஏற்பட்டு இருக்காது என போலீசார் சிலர் வேதனையுடன் தெரிவித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications