காவிரியில் வெள்ளம்-ஒகேனக்கல் அருவியில் குளிக்க இன்றும் தடை
ஒகேனக்கல்: கர்நாடக அணைகளில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஒகேனக்கல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால், கிருஷ்ணராஜசாகர், ஹேரங்கி, கபினி அணைகள் நிரம்பி வழிகின்றன. இதனால், இந்த அணைகளுக்கு வரும் நீர், காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தண்ணீரில் செடி, கொடி, மரம் ஆகியவை அடித்துக் கொண்டு வரப்படுவதால், பாதுகாப்பு கருதி ஒகேனக்கல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.
நடைபாதைக்கு மேல் தண்ணீர் ஓடுவதால், நடைபாதை வழியாக அருவிக்கு செல்லவும் தடை விதித்க்கப்பட்டுள்ளது. இந்த தடை 4வது நாளாக இன்றும் நீடிப்பதால் ஒகேனக்கல் செல்லும் சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications