கடற்படை சீல் படையினரைக் கொன்ற தலிபான்களை குண்டு வீசிக் கொன்றது அமெரிக்கா
காபூல்: ஒசாமா பின்லேடனைக் கொன்ற அமெரிக்கக் கடற்படையின் 6வது சீல் பிரிவு வீரர்கள் பயணித்த ஹெலிகாப்டரை தாக்கி அதில் இருந்த 30க்கும் மேற்பட்டோரைக் கொன்ற தலிபான் தீவிரவாதிகளை குண்டு வீசிக் கொன்று விட்டதாக அமெரிக்கப் படையினர் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் முக்கியப் பிரமுகர்கள் யாரேனும் உள்ளனரா என்பதை அமெரிக்கா தெரிவிக்கவில்லை. கிட்டத்தட்ட 25 தலிபான்கள் அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. அந்தப் பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், அமெரிக்கப் படையினர் போர் விமானம் மூலம் உள்ளே பறந்து வந்து தாக்குதல் நடத்தி விட்டுச் சென்றதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் பறந்து கொண்டிருந்த அமெரிக்க கடற்படை சீல் படையினர் பயணித்த ஹெலிகாப்டரை ராக்கெட் லாஞ்சர் மூலம் தலிபான் தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தினர். இதில் 30க்கும் மேற்பட்ட கடற்படை சீல் பிரிவினர் கொல்லப்பட்டனர். அவர்களில் பலர் பின்லேடன் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் என்று கூறப்படுகிறது. இதனால் அமெரிக்கா அதிர்ச்சி அடைந்தது.
இந்த நிலையில் அமெரிக்கப் படையினர் மீது தாக்குதல் நடத்திய தலிபான்களை ஏவுகணைத் தாக்குதல் மூலம் வீழ்த்தியுள்ளதாக அமெரிக்கப் படையினர் கூறியுள்ளனர். பாகிஸ்தானில் உள்ள வடக்கு வசிரிஸ்தானில் உள்ள ஒரு நிலையைக் குறி வைத்து நடந்த தாக்குதலின்போது 25க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், அவர்கள் அமெரிக்கப் படையினர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் என்றும் அமெரிக்கப் படையினர் கூறியுள்ளனர்.
சம்பவ இடத்தில் 25க்கும் மேற்பட்ட உடல்களைப் பார்த்ததாக அப்பகுதியைச் சேர்ந்தவர்களும் கூறியுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications