திசையன்விளையில் திருட்டு சிடி விற்ற 4 பேர் கைது: 5200 சிடிக்கள் பறிமுதல்
நெல்லை: திசையன்விளை சிடி சென்டர்களில் திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 5 ஆயிரத்து 200 திருட்டு சிடிக்கள் சிக்கின. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திசையன்விளையில் திருட்டு சிடி விற்பனை அமோகமாக நடப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு ஏடிஜிபி சேகர் உத்தரவி்ன் பேரில் ஐஜி கிருஷ்ணமூர்த்தி மேற்பார்வையில் டிஐஜி ஜான் நிக்கல்சன், சென்னை சிபிசிஐடி, திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு எஸ்பி விஜயகுமாரி, சென்னை இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷணன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் திசையன்விளையில் உள்ள சிடி கடைகளை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
அப்போது திருட்டு சிடிக்கள் விற்ற கார்த்திக், வேல்குமார், முத்து, முத்துகுமார் ஆகிய 4 பேரையும கைது செய்ததோடு, சிடி கடைகளில் இருந்த 5 ஆயிரத்து 200 சிடிக்களையும் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என தெரிகிறது.
திருட்டு சிடி தயாரிப்பதோ அல்லது அதனை விற்பதோ சட்டப்படி குற்றமாகும். மேற்கண்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் திருட்டு சிடிக்கள் விற்பவர்கள் அல்லது தயாரிப்பவர்கள் பற்றிய தகவல்களை 97898-43111 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் கொடுக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications