சொத்துக் குவிப்பு வழக்கு-ஜெயலலிதா நேரில் ஆஜராக வேண்டும் என பெங்களூர் கோர்ட் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
பெங்களூர்: நேரில் ஆஜராவதிலிருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரி மனுசெய்திருந்த முதல்வர் ஜெயலலிதாவின் இரு மனுக்களை பெங்களூர் தனி கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது. அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் அது உத்தரவிட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதா மீது கடந்த கால திமுக ஆட்சியின்போது 13 வழக்குகள் தொடரப்பட்டன. அதில் 11 வழக்குகளிலிருந்து அவர் விடுதலையாகி விட்டார். சொத்துக் குவிப்பு வழக்கு மற்றும் கிப்ட் செக் வழக்குகள் மட்டும் நிலுவையில் உள்ளன. இதில் சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் தனி கோர்ட்டில் விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கில் ஜெயலலிதா நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது பெங்களூர் கோர்ட். இதே வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதில் சசிகலாவும், இளவரசியும் நேரில் ஆஜராகி விட்டனர்.

இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா சார்பில் இரு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், ஒரு மனுவில், நேரில் ஆஜராவதிலிருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும். சட்டசபைக் கூட்டத் தொடர் நடந்து வருவதால் எழுத்துப் பூர்வமாக வாக்குமூலம் அளிக்க அனுமதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இன்னொரு மனுவில் வீடியோ கான்பரன்சிங் மூலம் வாக்குமூலம் அளிக்க தான் தயாராக இருப்பதாக கூறியிருந்தார் ஜெயலலிதா.

இந்த இரு மனுக்களும் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது இரு மனுக்களையும் நீதிபதி தள்ளுபடி செய்து விட்டதாகவும், ஜெயலலிதா நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டதாக அரசு சிறப்பு வழக்கறிஞரின் உதவியாளரான சந்தோஷ் குப்தா தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+