11 பெண்களை கொன்று புதைத்த கொலையாளிக்கு மரணத் தண்டனை

அமெரிக்க நாட்டின் ஒஹியோவில் உள்ள க்ளீவ்லாந்து பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டனி சோவல். கடந்த 2009ம் ஆண்டு கற்பழிப்பு வழக்கு தொடர்பாக, ஹலாவின் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, கைது செய்யப்பட்டார். சோவலிடம் நடத்திய விசாரணையில், போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.
சந்தேகத்தின் பேரில் சோவல் வீடு உள்ள பகுதியில் தோண்டிய போது, சமீபத்தில் புதைக்கப்பட்ட 2 பெண் உடல்கள் கிடைத்தன. இவற்றை ஆராய்ந்த போது, கற்பழித்து கொல்லப்பட்டிருந்தது தெரிந்தது. போலீசார் வீட்டை சுற்றிலும் உள்ள மற்ற பகுதிகளையும் தோண்டிய போது அடுத்தடுத்து பெண் உடல்கள் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டு கிடைத்தன. அந்த உடல்களை குறித்து விசாரித்தபோது, சில மாதங்களுக்கு முன் காணாமல் போனதாக தேடப்பட்ட பெண்ணின் உடல் என்பது தெரிந்தது.
அதின் பின் சோவலிடம் நடத்திய தொடர் விசாரணையில், அப்பகுதியில் காணாமல் போன 11 பெண்களை கற்பழித்து கொலை செய்து, அவர்களின் உடலைகளை தனது வீட்டை சுற்றிலும் உள்ள பல்வேறு இடங்களில் புதைத்து வைத்திருந்தது கண்டெடுக்கப்பட்டது.
கடந்த 2007ம் ஆண்டு முதல் தன் கொலை வேட்டையை துவக்கிய சோவல், பெண்களை பேச்சில் மயக்கி, போதை மற்றும் மதுபானங்கள் தருவதாக கூறி வீட்டிற்கு அழைத்து வருவது வழக்கம். அதன்பின் அவர்களை கற்பழித்து கொலை செய்துவிடுவார். கொலை செய்த பெண்களின் உடல்களை தன் வீட்டை சுற்றிலும் புதைத்துள்ளார்.
தொடர்ந்து 11 பெண்களின் உடல்களை புதைக்கப்பட்டதால், அப்பகுதி எங்கும் துர்நாற்றம் வீச ஆரம்பித்துவிட்டது. ஆனால், அப் பகுதியினர் அருகில் இருந்த தொழிற்சாலையின் மீது சந்தேகப்பட்டனர். பின்னாளில், தொடர் கொலைகள் குறித்து தெரியவந்தது. சோவலிடம் சிக்கிய பெண்கள் அனைவரும் கருப்பின மக்கள். இதில் சிலர் குற்றப் பிண்ணனிக் கொண்டவர்களாக இருந்துள்ளனர்.
சோவலை மீது, பெண்களை கடத்துதல், கற்பழித்தல், கொடுமைப்படுத்துதல், கொலை செய்தல், சாட்சிகள் மற்றும் தடயங்களை மறைத்தல் ஆகிய பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தனர். ஒஹியோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த சோவலின் வழக்குகளின் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் தொடர் கொலை வழக்குகளில் ஈடுபட்ட ஆண்டனி சோவலுக்கு மரணத் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.
தீர்ப்பிற்குப் பிறகு சோவல் கூறுகையில், நான் செய்தது தவறுதான். இருந்ததாலும் எல்லாரிடமும், எல்லாவற்றிற்காகவும் மன்னிப்பு கேட்கிறேன். இது என் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வந்தது", என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications