ரூ.பல கோடி மோசடி செய்த பாசி நிதி நிறுவன இயக்குனர்கள் 3 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

Paazee Finance Company Officers
திருப்பூர்: பொது மக்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் வட மாநிலத்தில் பதுங்கி இருந்த பாசி நிதி நிறுவன இயக்குனர்கள் 3 பேரை சி.பி.ஐ., போலீசார் கைது செய்தனர்.

திருப்பூரை தலைமையிடமாக கொண்ட பாசி நிதி நிறுவனத்தில் கடந்த 2008-09 ஆண்டுகளில் பலர் பணத்தை முதலீடு செய்தனர். இதன்மூலம் பாசி நிறுவனத்திற்கு 1,600 கோடி ரூபாய் வரை முதலீடு சேர்ந்தது.

ஆனால், முதலீட்டாளர்களுக்கு பணம் முதிர்வடைந்த நிலையில் அவர்களுக்கு உரிய காலத்தில் பணம் திருப்பிப் தரப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து, திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் பாசி இயக்குனர்களை வழக்கு பதிந்து தேடி வந்தனர்.

ஆனால், பணத்தை திரும்ப தருவதாக நிறுவனம் கொடுத்த உத்தரவாதத்தின்பேரில் பாசி நிறுவன இயக்குனர்களுக்கு கடந்த 2009 அக்டோபர் 8 ம் தேதி உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியது. ஜாமீன் நிபந்தனையின்படி முதலீட்டாளர்களுக்கு பாதி நிறுவனம் பணத்தை திரும்ப வழங்காத காரணத்தினால், 2010 செப்டம்பரில் முன் ஜாமீனை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் அவர்கள் தலைமறைவாயினர். உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வழக்குகள் சிபிஐ போலீசார் வசம் ஒடைப்படைக்கப்பட்டது.

சிபிஐ போலீசார் தலைமறைவான பாசி நிதி நிறுவனத்தின் இயக்குனர்களை வலை வீசி தேடி வந்தனர். இந்நிலையில், பாசி நிதி நிறுவன இயக்குனர்கள் வட மாநிலங்களில் பதுங்கி இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன்பேரில் சிபிஐ போலீசார் வடமாநிலங்களில் தேடுதல் நடத்தி போது, அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்த பாசி நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மோகன்ராஜ் சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதே போல மேகலாயாவில் தங்கியிருந்த கதிரவன், கமலவள்ளி ஆகியோரையும் சிபிஐ போலீசார் கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+