பக்கத்து வீட்டில் கொசு மருந்து அடித்தபோது புகை தாக்கி ஐடி நிறுவன ஊழியர் மரணம்
துபாய்: பக்கத்து வீட்டில் கொசு மருந்து அடித்தபோது அந்த நெடி தாக்கிய மூச்சுத் திணறி இந்திய தகவல் தொடர்பு நிறுவன ஊழியர் ஒருவர் துபாயில் மரணமடைந்தார்.
அவரது பெயர் ராகவேந்திரா சிவாஜி. 33 வயதான அவர் சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் மார்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றி வந்தார். அங்கு கேரளாவைச் சேர்ந்த வங்கி ஊழியர் பினு முரளீதரன் என்பவருடன் தங்கியிருந்தார்.
இந்த நிலையில் அவரது பக்கத்து வீட்டில் கொசு மற்றும் பூச்சிகளைக் கொல்லும் மருந்து அடித்துள்ளனர். அப்போது அந்தப் புகை, சிவாஜி இருந்து வந்த வீட்டுக்குள்ளும் பரவியது.
ஏற்கனவே ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர் என்பதால் சிவாஜி மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தார். பினு முரளிதரன் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது நிலைமை அபாயத்தில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராகவேந்திரா சிவாஜி ஆந்திர மாநிலம் கரம்சேடு என்ற பகுதியைச் சேர்ந்தவர். கடந்த நவம்பர் மாதம்தான் அவருக்குத் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications