கேரளாவில் நடந்த புகழ்பெற்ற பாம்புப் படகுப் போட்டி-தமிழக வீரர்களும் பங்கேற்பு

கேரள மாநிலம், ஆலப்புழாவில் உள்ள புன்னமாட ஆற்றில் ஆண்டுதோறும் படகுப் போட்டி நடத்தப்படுகிறது. இதில் உள்ளூர் மட்டுமின்றி வெளிநாட்டை சேர்ந்த ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் கலந்து கொள்வது வழக்கம்.
கடந்த 1952ம் ஆண்டு இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு கேளராவிற்கு வந்தபோது, அவரை சுற்றுலாவிற்காக, கோட்டயத்தில் இருந்து ஆலப்புழா வரை படகில் அழைத்து செல்லப்பட்டார். அப்போது, இந்த படகுப் போட்டியைக் கம்ட நேருவுக்கு அது மிகவும் கவர்ந்தது.
டெல்லி சென்ற அவர், தனது கையெழுத்திட்ட வெள்ளிக் கோப்பையை பரிசாக வழங்குமாறு கேரளாவிற்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து அன்றுமுதல், இந்த போட்டிக்கு அவரது பேரிலேயே சுழற்கோப்பை வழங்கப்பட்டு வருகிறது.
இந்தாண்டிற்கான 59 வது போட்டியை நேற்று மதியம் 2.30 மணிக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் துவக்கி வைத்தார். இந்தியாவிலேயே மிகப் பெரிய படகுப் போட்டியான இதில், 19 பாம்பு படகுகள் உட்பட 59 படகுகள் போட்டியி்ல் கலந்து கொண்டன. 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட வெளிநாட்டவர் உட்பட 30 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வையாளர்களின் உற்சாகத்தை பெற்ற போட்டியாளர்கள் படகுகளை தண்ணீரில் வேகமாக செலுத்தினர்.
இதில், கொல்லம் ஜீசஸ் போட் அணியை சேர்ந்த தேவாஸ் சூடன் கோப்பையை தட்டிச் சென்றனர். இரண்டாவதாக கரிச்சல் சூன்டன் அணியினர் வந்தனர். வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகளும், விருதுகளும் வழங்க, பார்வையாளர்கள் கரவொளி வலுத்தது.
இந்த போட்டியில், சென்னையை சேர்ந்த மெட்ராஸ் இன்ஜினியரிங் கல்லூரியை சேர்ந்த 51 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.
கடந்தாண்டு உலகப் கோப்பை கால்பந்துப் போட்டியில், தங்க ஷூ பரிசுப் பெற்ற ஜெர்மன் வீரர் தாமஸ் முல்லர் மற்றும் குடும்பத்தினர் பார்வையாளர்கள் வரிசையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications