அவதூறு பேச்சு-திமுக பேச்சாளர் வாகை முத்தழகன் பாளை சிறையில் அடைப்பு

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: திமுக தலைமை கழக பேச்சாளராக இருந்தவர் வாகை முத்தழகன். இவர் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு மேல்புறம் ஒன்றியத்தில் திமுக சார்பில் களியக்காவிளையில் நடந்த பொது கூட்டத்தில் கலநது கொண்டு பேசினார்.

இதில் முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், ஹெலன் டேவிட்சன் எம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர். பொது கூட்டத்தில் வாகை முத்தழகன் முதல் அமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதால் அங்கிருந்த அதிமுகவினருக்கும், திமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இது தொடர்பாக விளவங்கோடு தொகுதி அதிமுக செயலாளர் உதயகுமார் கொடுத்த புகாரின் பேரில் வாகை முத்தழகன் உள்பட 11 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பொது கூட்டத்தில் வாகை முத்தழகன் மத்திய அரசையும் விமர்சித்து பேசியதாக கூறி காங்கிரசாரும் மறியலில் ஈடுபட்டனர். இதையடுதது கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக வாகை முத்தழகன் மீது திமுக தலைமை நடவடிக்கை எடுத்தது. அவர் கட்சியின் தலைமை கழக பேச்சாளர் பொறுப்பி்ல் இருந்தும் நீக்கப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வாகை முத்தழகன் அதிமுக நிர்வாகி உதயகுமாரை மிரட்டியதாக அவர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் வாகை முத்தழகனை கைது செய்தனர். பின்னர் அவர் பாளை சிறையில் அடைக்கப்பட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+