லாரி ஸ்டிரைக்: ரூ.100 கோடி பட்டாசுகள் முடக்கம், திருப்பூரில் பனியன்கள் தேக்கம்

Subscribe to Oneindia Tamil

Crackers
சிவகாசி: லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக சிவகாசியில் இருந்து பட்டாசு அனுப்பும் பணி பாதித்து தினமும் ரூ.100 கோடி மதிப்பிலான பட்டாசுகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருப்பூரில் பனியன்கள் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி, தீபாவளிக்காக சிவகாசியில் இருந்து மகராஷ்டிரா, குஜராத், மேற்கு வங்க மாநிலங்களுக்கு தினமும் 150 முதல் 200 லாரிகளில் பட்டாசு அனுப்பப்படுகிறது. செப்டம்பர் முதல் தேதி விநாயகர் சதுர்த்திக்காக மும்பை, வடமாநிலங்களுக்கு பட்டாசு அனுப்பும் பணி சூடுபிடிக்கும். ஆனால் இன்று நள்ளிரவு முதல் லாரிகள் வேலை நிறுத்தத்தால் நேற்று முன்தினம் முதல் வடமாநிலங்களுக்கு புக்கிங் நிறுத்தப்பட்டது. இதனால் தினசரி சுமார் 200 லோடு பட்டாசு தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தினசரி ரூ. 100 கோடி மதிப்பிலான பட்டாசுகளை வெளிமாநிலங்களுக்கு அனுப்ப முடியாமல் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

திரு்ப்பூரில் பனியன் தேக்கம்:

லாரி ஸ்டிரைக் காரணமாக சரக்கு புக்கிங் வாகன உரிமையாளர்கள் சங்கம் கடந்த 14-ம் தேதி முதல் வெளிமாநிலங்களுக்கு புக்கிங் செய்வதை நிறுத்தினார்கள். இதனால் திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் தினசரி பல கோடி ரூபாய்க்கு வர்த்தகம் பாதிக்கும் என பனியன் உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். திருப்பூரில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான சரக்கு லாரிகள் இயங்கி வருகின்றன. வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளதால் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+