தீபாவளி.. தென் மாவட்ட ரயில்களில் ஒரு இடம் கூட காலி இல்லை!
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் நிரம்பி விட்டன. அவற்றில் ஒரு இடம் கூட காலியாக இல்லை. இதையடுத்து சிறப்பு ரயில்களை இயக்கினால் மட்டுமே நிலைமையை சமாளிக்க முடியும் என்ற நிலை உள்ளது.
வரும் அக்டோர் 26ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அக்டோபர் 20ம் தேதி முதல் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் எல்லா ரயில்களும் நிரம்பிவிட்டன.
அதே போல 27ம் தேதி முதல் நவம்பர் 1ம் தேதி வரை சென்னைக்கு வரும் அனைத்து ரயில்களிலும், முன்பதிவு முடிந்து விட்டது.
இதனால் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் தென்னக ரயில்வேவுக்கு கோரிக்கைகள் சென்ற வண்ணம் உள்ளன. அதை தீபாவளிக்கு முதல் நாள் ராத்தியில் அறிவிக்காமல், முன் கூட்டியே அறிவித்தால் பயணிகளுக்கு வசதியாக இருக்கும்.
செய்வார்களா அதிகாரிகள்?..
விழுப்புரம் ரயில் நிலையத்தில் தடம்புரண்ட புதுச்சேரி ரயில்:
இந் நிலையில் புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் வந்த பயணிகள் ரயில் தடம்புரண்டது.
புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்துக்கு நேற்றிரவு 9 மணிக்கு பாசஞ்சர் ரயில் சென்றது. இரவு 9.45 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்ட பின் பராமரிப்பு யார்டு பகுதிக்கு சென்றது.
8 பெட்டிகளுடன் சென்ற இந்த ரயில் பின்னோக்கி சென்றபோது அதன் 4, 5வது பெட்டிகள் தடம் புரண்டு தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கின. விழுப்புரம் ரயில் நிலையத்திலேயே இந்த சம்பவம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ரயில்வே மீட்புப் படையினர் விரைந்து வந்து ரயில் பெட்டிகளை தண்டவாளத்தில் நிலை நிறுத்தினர். ரயில் தடம் புரண்டது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications