வேலூரில் நகைக்கடையில் ஓட்டை போட்டு ரூ.1.30 கோடி நகை, பணம் கொள்ளை
வேலூர் : வேலூரில் நகைக் கடை சுவரில் துளை போட்டு 5 கிலோ தங்க நகைகள், மற்றும் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
வேலூர் மெயின் பஜாரில் வாணியம்பாடியைச் சேர்ந்த டிக்காராம் என்பவருக்கு சொந்தமான நகைக்கடை உள்ளது. இந்த கடையை அவரது மகன்களும், அவரும் இரவு நேரத்தில் வழக்கம் போல் பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றனர்.
காலை கடையை திறந்து உள்ளே சென்று பார்த்த போது கடையில் வைக்கப்பட்ருந்த நகைகள் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று தீவிர விசாரனை நடத்திய போது நகைக்கடை மாடியில் உள்ள சுவரில் துளை போட்டு உள்ளே நுழைந்து, ஷோ கேஷில் இருந்த 5 கிலோ நகைகள், கல்லாவில் இருந்த 40 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஆனால், வெள்ளிப் பொருள்களை அவர்கள் எடுத்துச் செல்லவில்லை.
கொள்ளைபோன நகைகள் மற்றும் ரொக்கத்தின் மொத்த மதிப்பு ரூ.1 கோடியே 30 லட்சம் என்று கூறப்படுகின்றது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொள்ளையர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.
கடையில் திருடர்கள் உள்ளே நுழையும் முன்பே ரகசிய காமிரா கேபிளை துண்டித்ததால் போலீசார் விசாரணையில் முன்னேற்றம் பாதிக்கப்பட்டுள்ளது.இந்த சம்பத்தால் வேலூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications