சென்னை: பெர்ஜர் பெயிண்ட்ஸ் நிறுவனம், தமிழகத்தில் ரூ. 200 கோடி முதலீட்டில் மிகப் பெரிய பெயிண்ட் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்குகிறது.
அடுத்த நிதியாண்டில் இந்த உற்பத்தி ஆலை இயக்கத்திற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு வகையான பெயிண்ட்டுகளைத் தயாரித்து வரும் முன்னணி நிறுவனமான பெர்ஜர் தனது உற்பத்திப் பிரிவை தமிழகத்தில் தொடங்கவுள்ளது. இதுகுறித்து நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைமை வர்த்தக மேம்பாட்டு மேலாளர் சஞ்சய் செளத்ரி கூறுகையில், தமிழகத்தில் புதிய ஆலையை அமைக்கிறோம். இப்பணிகள் டிசம்பர் இறுதியில் முடிவடையும். அடுத்த நிதியாண்டின் தொடக்கத்தில் இந்த ஆலை செயல்படத் தொடங்கும் என்றார்.
பெர்ஜர் நிறுவனத்திற்கு இந்தியாவில் தற்போது 8 ஆலைகள் உள்ளன. தமிழகத்தில் தொடங்கப்படும் பிரிவு 9வது உற்பத்திப் பிரிவாகும்.
2011, மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில், பெர்ஜர் நிறுவனத்தின் விற்பனை அளவு ரூ. 2,328.12 கோடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த நிதியாண்டில் 15 சதவீத வருவாய் உயர்வுக்கு அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
Berger Paints India said it is setting up a new production plant in Tamil Nadu with an investment of Rs 200 crore which is likely to be operational by next fiscal. The company that manufactures and markets a range of decorative and industrial paint products under various product brands also said it is also looking to diversify into industrial chemicals segment in the long term. "We are setting up a new plant in Tamil Nadu, which is likely to be completed by December this year, and would start production by early next fiscal," Berger Paints India Chief Business Development Manager Sanjay Chowdhury told reporters here on the sidelines of an IIFT event.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.