ஆக 24 - புதுவை முதல்வர் ரெங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார்
புதுச்சேரி : புதுவை சட்டசபையில் வரும் 24 ம் தேதி முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் 18 ம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தில் புதுவை ஆளுநர் இக்பால்சிங் உரையாற்றினார்.
ஆளுநர் உரை முடிந்ததும் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் அறிக்கையை முதலமைச்சரின் நாடாளுமன்ற செயலாளர் வைத்தியநாதன் முன்மொழிந்தார். அதை அரசு கொறடா நேரு வழி மொழிந்தார். இதைத் தொடர்ந்து சபாநாயகர் சபாபதி சபையை ஒத்திவைத்தார். இதனையடுத்து, மீண்டும் சட்டசபை வரும் 24 ம் தேதி காலை 9.30 மணிக்கு கூடும் என்று அறிவித்தார்.
அன்றைய தினம் முதலமைச்சர் ரங்கசாமி 2011 - 12 ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சட்டசபை செயலாளர் சிவப்பிரகாசம் வெளியிட்டார்.
கடந்த காலங்களில் முதலமைச்சர் ரங்கசாமி வரியில்லாத பட்ஜெட்டுகளை சமர்ப்பித்துள்ளார். எனவே இந்த பட்ஜெட்டிலும் வரி விதிப்புகள் ஏதும் இருக்காது என்று ஆளும் கட்சி தரப்பில் இருந்து தகவல்கள் கசிகின்றது.












Click it and Unblock the Notifications