ஒசாமா கொலைக்கு பழிவாங்க ஈராக்கில் 100 இடங்களை தாக்குவோம்: அல் கொய்தா மிரட்டல்
பாக்தாத்: ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டதற்கு பழிவாங்க ஈராக்கில் 100 இடங்களில் தாக்குதல் நடத்தப்போவதாக அல் கொய்தா தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
அமெரிக்கப் படைகள் கடந்த மே மாதம் 2-ம் தேதி அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனை அவரது அப்போத்தாபாத் இல்லத்தில் வைத்து சுட்டுக் கொன்றன. இந்த சம்பவத்திற்கு பழி வாங்கக் கிளம்பியுள்ளது அல் கொய்தா. தற்போது ஈராக்கில் 100 இடங்களில் தாக்குதல் நடத்தப் போவதாக அல் கொய்தா தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது குறித்து ஒரு இஸ்லாமிய இணையதளத்தில் அல் கொய்தா சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பின்லேடன் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக ஈராக்கில் 100 இடங்களில் தாக்குதல் நடத்துவோம். அவை தற்கொலை தாக்குதல்களாகவும், ரோட்டோர குண்டு வெடிப்பாகவும், துப்பாக்கிச் சூடு போன்றவையாகவும் இருக்கலாம். அவை தவிர சத்தமில்லாமல் மிக அமைதியான முறையில் ஆயுத தாக்குதல்களும் நடத்தப்படலாம்.
இது ஈராக்கின் அனைத்து நகரங்கள் மற்றும் கிராமங்களிலும் நடைபெறும். நோன்பு மேற்கொள்ளும் புனித ரமலான் மாதத்தின் நடுவில் அதாவது ஆகஸ்டு மாதத்தில் இந்த தாக்குதல்கள் தொடங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த 15-ம் தேதி ஈராக்கின் 7 மாகாணங்களில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதல்களில் 70 பேர் பலியாகினர், 260 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதல்களுக்கு அல் கொய்தா பொறுப்பேற்றுள்ளது.
அல் கொய்தா தீவிரவாதிகளி்ன் இந்த மிரட்டலால் ஈராக் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்க படை வாபஸ் பெறவிருக்கும் நிலையில் அல் கொய்தாவை ஈராக் ராணுவத்தால் சமாளிக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications