தங்கமயமாகும் ஆற்றுக்கால் பகவதியம்மன் கோவில் மூலஸ்தானம்
திருவனந்தபுரம்: கேரளாவில் பிரசித்தி பெற்ற ஆற்றுக்கால் பகவதியம்மன் கோவில் மூலஸ்தனத்திற்கு தங்கமுலாம் பூசப்படுகிறது.
கேரளாவில் பிரசித்தி பெற்ற ஆற்றுக்கால் பகவதியம்மன் கோவில் பெண்களின் சபரி்மலை என்று போற்றப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இக்கோவிலில் நடைபெறும் பொங்கல் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொள்வார்கள்.
இந்தியாவின் பல இடங்களில் இருந்தும் இக்கோவிலுக்கு வேண்டுதலை நிறைவேற்ற வந்து செல்லும் பக்தர்கள் பணம் மட்டுமின்றி தங்கம், வெள்ளி நகைகளையும் காணிக்கையாக செலுத்துகின்றனர். காணிக்கையாக கிடைத்த தங்கம் மற்றும் தங்க நகைகளின் மதிப்பு பல கோடி என்று கூறப்படுகிறது.
காணிக்கையாக கொட்டிக் கிடக்கும் தங்கத்தை வைத்து ஆற்றுக்கால் பகவதியம்மன் வீற்றிருக்கும் மூலஸ்தானம் முழுவதையும் தங்க முலாம் பூச கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக தங்கத்தை உருக்கி மூலஸ்தானத்தை தங்கமயமாக்கும் பணியை யுஏஏ நிறுவன மேலாளர் ஷெட்டி தொடங்கி வைத்தார்.
மும்பையில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள வடிவமைப்பு நிபுணர்கள் மூலஸ்தானத்தை தங்கமயமாக்கி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications