அமெரிக்காவிலிருந்து செப். முதல் வாரத்தில் டெல்லி திரும்புகிறார் சோனியா
டெல்லி: அமெரிக்காவில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி செப்டம்பர் முதல் வாரத்தில் டெல்லி திரும்புவார் என்று தெரிகிறது.
சோனியா காந்திக்கு கருப்பை வாய் புற்றுநோய் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு வயிற்றில் வலி அதிகரிக்கவே உடனடியாக அவர் நியூயார்க் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டது. வெற்றிகரமான அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் சோனியா காந்தி தொடர்ந்து மருத்துவமனையிலேயே தங்கி ஓய்வெடுத்து வருகிறார்.
தற்போது அவரது நிலை பரவாயில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அவர் இந்திய அரசியல் நிலவரம் குறித்து கேட்டறிந்து வருவதாக தெரிகிறது. அன்னா ஹஸாரே விவகாரம் குறித்தும் அவரிடம் கூறப்பட்டுள்ளது.
உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து செப்டம்பர் முதல் வாரத்தில் அவர் டெல்லி திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வியிடம் கேட்டதற்கு, சோனியா காந்தியின் வழிகாட்டுதலில்தான் நாங்கள் இயங்கி வருகிறோம். அவர் விரைவில் திரும்ப வேண்டும் என்று நாங்களும் ஆவலுடன் காத்துள்ளோ்ம். விரைவில் சோனியா தாயகம் திரும்புவார் என்றார்.












Click it and Unblock the Notifications