லோக்பால் விவகாரத்தில் பாஜக அணுகுமுறைக்கு யஷ்வந்த் சின்ஹா, சத்ருகன் சின்ஹா கண்டனம்
டெல்லி: லோக்பால் விவகாரத்தில் பாஜக மிகவும் மென்மையான போக்கைக் கடைப்பிடித்து வருகிறது. இதை தீவிரமான பிரச்சினையாகவே அது கருதவில்லை. இந்த நிலை நீடித்தால் எங்களது எம்.பி பதவிகளை நாங்கள் ராஜினாமா செய்யத் தயங்க மாட்டோம் என்று பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹாவும், கட்சி எம்.பி சத்ருகன் சின்ஹாவும் கூறியுள்ளதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து யஷ்வந்த் சின்ஹா கூறுகையில், லோக்பால் விவகாரத்தில் வலுவான நிலையை எடுக்க பாஜக தவறி விட்டது. ஊழலுக்கு எதிரான போராட்டத்தை வலுவுள்ளதாக மாற்ற வேண்டியது முக்கியக் கட்சியான பாஜகவின் கடமையாகும். ஆனால் பாஜகவோ மிகவும் மென்மையான போக்கைக் கடைப்பிடித்து வருகிறது.
இந்த நிலை நீடித்தால் எனது எம்.பி. பதவியை நான் ராஜினாமா செய்து விட்டுப் போக வேண்டியதுதான் என்றார்.
இதேபோல கருத்து தெரிவித்துள்ளார் சத்ருகன் சின்ஹாவும். இவர்களைத் தவிர பாஜக எம்.பி உதய் சிங்கும் கட்சிக்கு அதிருப்தியைத் தெரிவித்துள்ளார்.
யஷ்வந்த் சின்ஹாவும், சத்ருகன் சின்ஹாவும், உதய் சிங்கும், அத்வானி தலைமையில் நடந்த கட்சியின் நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது இந்த அதிருப்தியை பகிரங்கமாக தெரிவித்ததால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சத்ருகன் சின்ஹா கூறுகையில், காங்கிரஸைத் தாக்க கிடைத்த வாய்ப்பாக மட்டும் கருதிக் கொண்டு ஒப்புக்கு பேசி வருகிறது பாஜக. இது தவறு. இந்தப் பிரச்சினையை பாஜக தீவிரமாக அணுகியிருக்க வேண்டும் என்றார்.
இருப்பினும் யஷ்வந்த் சின்ஹா ராஜினாமா செய்வதாக கூறவில்லை என்று கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான எம்.எஸ்.அலுவாலியா கூறியுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications